கடையம் திருவள்ளுவர் கழக கூட்டம்
1 min read
Kadayam Thiruvalluvar Kazhagam meeting
25.11.2024
கடையம் திருவள்ளுவர் கழக நவம்பர் மாத சிறப்பு கூட்டம் வடக்கு ரத வீதியில் உள்ள கே.எஸ்.எஸ். சிற்றரங்கத்தில் நடந்தது. திருவள்ளுவர் கழகத் தலைவர் ஆ.சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார். செ.சோமசுந்தரம் குறள் சிந்தனை வழங்கினார். முக்கூடல் சொக்கலால் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் த.லாரன்ஸ் “இயற்கையோடு இணைந்து வாழ்வோம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
திருவள்ளுவர் கழக செயலாளர் கே.எஸ்.கல்யாணி சிவகாமிநாதன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கிய பேரவைத் தலைவர் கவிஞர் முருகன், இன்பசேகரன், சின்னசாமி மற்றும் தமிழ் ஆர்வலர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், மாணவர் என பலர் கலந்த கொண்டனர்.
பணிநிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் அந்தோணிராஜ் நன்றி கூறினார். முன்னதாக மாணவர் மதுபாலன் இறைவணக்கம் பாடினார்.