கூகுள் மேப் மூலம் கோவா செல்வதற்கு பதில் கர்நாடகா வனப்பகுதியில் சிக்கிய பீகார் குடும்பம்
1 min read
Bihar family gets stuck in Karnataka forest instead of going to Goa via Google Maps
7.12.2024
பீகாரில் வசித்து வரும் குடும்பம் ஒன்று காரில் கோவாவுக்கு கூகுள் மேப் உதவியுடன் சென்றுள்ளது. அப்போது கூகுள் மேப் தவறாக வழியை காண்பித்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவர்கள் வழிமாறி கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிக் கொண்டனர். அடர்ந்த வனப்பகுதி என்பதால், மொபைல் நெட்வொர்க் வேலை செய்யாததால் இரவு நேரம் முழுவதும் அவர்களுக்கு என்ன செய்வதென்று அறியாமல் அச்சமடைந்து காரிலே இருந்துள்ளனர்.
அடுத்த நாள் காலை விடிந்தவுடன், மொபைல் நெட்வொர்க் உள்ள இடத்தைக் கண்டுபிடிக்க அவர்கள் சுமார் 3 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளனர். பின்னர் அவசர உதவி எண்ணை தொடர்புகொண்டு, விவரத்தை தெரிவித்துள்ளர். அதைத் தொடர்ந்து உள்ளூர் போலீசார் அவர்களை காட்டில் இருந்து பாதுகாப்பாக மீட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் கூகுள் மேப்பைப் பின்தொடர்ந்ததாகவும், இந்த சம்பவம் பரேலி – பிலிபித் நெடுஞ்சாலையில் நடந்ததாகவும், காரில் குழந்தைகள் உள்பட சுமார் ஏழு பேர் இருந்ததாக போலீஸ் அதிகாரி நாயக் தெரிவித்தார்.