June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

சத்தீஷ்காரில் நடந்த என்கவுன்டரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

1 min read

7 Naxalites killed in encounter in Chhattisgarh

12.12.2024
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றான சத்தீஷ்காரில் அவ்வபோது பாதுகாப்புப்படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே என்கவுன்டர் நடைபெறுகிறது.

அந்த வகையில், சத்தீஷ்காரின் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மாத் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே இன்று அதிகாலை 3 மணியளவில் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.
இந்த மோதலில் நக்சலைட்டுகள் 7 பேர் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட 7 நக்சலைட்டுகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சில நக்சலைட்டுகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாதுகாப்புப்படையினர் அங்கு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புப்படையினரை தவிர நாராயண்பூர், தண்டேவாடா, பஸ்தார் மற்றும் கொண்டகான் மாவட்டங்களில் இருந்து மாவட்ட ரிசர்வ் காவலர்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *