நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு மாற்றம்: பிரசாந்த் வடநரே நியமனம்
1 min read
Water Resources Department Secretary Satyabrata Sahoo transferred; Prashant Wadnere appointed
1/8/2026
தமிழக அரசின் நீர்வளத்துறை புதிய செயலாளராக பிரசாந்த் வடநரே நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலாளராக நியமிக்கப்பட்டவர் ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த் வடநரே. இவர் தற்போது பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழக அரசின் நீர்வளத்துறையின் புதிய செயலாளராக பிரசாந்த வடநரே நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அவர் ஏற்கனவே இருந்த ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலாளர் பணி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.
நீர்வளத் துறை செயலாளராக இருந்த சத்யபிரதா சாகுவுக்கு பணியிடம் ஒதுக்கப்படவில்லை.