தென்காசியில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையதலைவர் ஆய்வு
1 min read
Tamil Nadu State Women’s Commission Chairperson inspects Tenkasi
12.12.2024
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமரி தென்காசி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமரி தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமரி கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், கல்லூரி மாணவிகளிடம் பெண்களுக்கான சட்டங்கள், குழந்தை திருமணம் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் இலவச உதவி எண்கள் ஆகியன பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் காவல்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் பற்றியும் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பற்றியும் எடுத்துரைத்தனர்.
மேலும், கல்லூரி மாணவிகள் பெண்கள் இலச்சினை மற்றும் பெண்கள் உதவி எண்ணான 181 போன்ற வடிவில் நின்று பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்பதினை விளக்கும் விதமாக பலூன்களை பறக்கவிட்டனர். மேலும் பெண்கெளுக்கெதிரான வன்கொடுமைகள் தடுப்பு விழிப்புணர்வாக கை அச்சு விழிப்புணர்வினை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் திருமதி.A.S.குமரி அவர்கள் துவக்கி வைத்தார்.
மேலும், மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் அனைத்துறை அலுவலருக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் திருமதி.A.S.குமரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பணிபுரியும் இடங்களில் பெண்கெளுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு, உள்ளக புகார் குழு அமைப்பது பற்றியும் மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் முயற்சியில் பாலியல் வன்கொடுமைக்கெதிரான புகார்களுக்கு அச்சம் தவிர் எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சீ.ஜெயச்சந்திரன், திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்)திருமதி.மதி இந்திரா பிரியதர்ஷினி, மாவட்ட சமூகநல அலுவலர் (சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை) செல்வி.மதிவதனா மற்றும் அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.