சிவகங்கை அருகே 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த பெண் கைது
1 min read
Woman arrested for killing 2 children by pushing them into a well near Sivaganga
12.12.2024
சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அருகே உள்ளது திருமண்பட்டி கிராமம். இங்கு வசிப்பவர் சந்திரன் இவருடைய மனைவி ரஞ்சிதா. இந்த தம்பதியினருக்கு கீர்த்தி (வயது 5), சங்கீதா(3) இருந்தனர். சந்திரன்-ரஞ்சிதாவுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக சண்டை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ரஞ்சிதா தனது குழந்தைகள் கீர்த்தி, சங்கீதா ஆகிய இருவரையும் கீழப்பங்குடி அய்யனார் கோவில் அருகே உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்தார். பின்னர் தப்பி ஓடி தலை மறைவானார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்து போன கீர்த்தி மற்றும் சங்கீதா ஆகிய இரு குழந்தைகளையும் மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பொதுமக்கள் ரஞ்சிதாவை பிடித்து மதகுபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மதகுபட்டி காவல்துறையினர் ரஞ்சிதாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.