கல்லூரணி திப்பணம்பட்டி பகுதியில் மனு நீதி நாள் முகாம்- ஆட்சித் தலைவர் பங்கேற்பு
1 min read
Manu Justice Day Camp in Kallurani Tippanampatti area – Participation of the Chief Minister
12.12.2024
தென்காசி மாவட்டம், கல்லூரணி, திப்பணம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு திப்பணம்பட்டி மலையப்பபுரம் அருஞ்சுனை கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், கல்லூரணி, திப்பணம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு திப்பணம்பட்டி மலையப்பபுரம் அருஞ்சுனை கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தாவது.
தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களும் சென்றடைந்து பயனடைய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் அரசுத்துறை அலுவலர்கள் அனைவரும் தங்கள் துறை சார்ந்த திட்டங்களை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் எடுத்துரைத்தார்கள். தமிழ்நாடு அரசு அறிமுகப் படுத்தியுள்ள அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள் கேட்டறிந்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர்.தெரிவித்தார்.
இம்முகாமில் வருவாய்த் துறையின் மூலம் 08 பயனாளிகளுக்கு ரூ.5.23,190/- மதிப்பிலான நத்தம் வரன்முறை பட்டாவிற்கான ஆணையினையும், 06 பயனாளிகளுக்கு இணையவழி பட்டாக்களையும். 01 பயனாளிக்கு தரிசு நிலத்திற்கான சான்றினையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 01 பயனாளிக்கு இயற்கை மரணத்திற்கான உதவித்தொகையினையும் (ECS மூலம் ரூ.20,000/- வரவு வைத்தல்), 08 பயனாளிகளுக்கு ழவர் அட்டைகளையும், வேளாண்மைத்துறை மூலம் 01 பயனாளிக்கு மாநில வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 10 கிலோஜிங்க் சர்பேட் விநியோகத்தில் ரூ.440/- மானியமும், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 02 பயனாளிகளுக்கு கு 2 கிலோ உளுந்து நுண்ணூட்ட உரம் விநியோகத்தில் தலா ரூ.118/ மானியமும், 01 பயனாளிக்கு மாநில வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் மாற்றுப்பயிர் திட்டம் உளுந்து விதை 8 கிலோ சூடோமோனாஸ் 1 கிலோ ரைசோபியம் 0.5 மற்றும் பாஸ் போக்ட்ரியா 0.5 இல் 1200/- மானியமும் தோட்டக்கலைத்துறை மூலம் 1 பயனாளிக்கு வெண்டை விதைகளையும், 1 பயனாளிக்கு மிளகாய் விதைகளையும் என மொத்தம் 30 பயனாளிகளுக்கு 5.45 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.
மனுநீதி நாள் முகாமில், தோட்டக்கலை துறை வேளாண்மை துறை, சமூகநலத்துறை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் அரசு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன் பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, மாவட்ட ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சாக்ரடீஸ், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் காவேரி சீனித்துரை மற்றும் அனைத்து துறை அலுவலர்கள். பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.