June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

1 min read

Flooding in the rivers of Kadayam

13-.12.2024
வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று பகலில் இருந்து தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நேற்று இடைவிடாது தொடர்ந்து மழை பெய்தது. இன்று விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
தென்காசி மாவட்டம் கடையம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. ஒரு நாள் இரவில் ராமநதி அணை நிரம்பியது. அதேபோல் குளங்கள் அனைத்தும் நிரம்பி மறுகால் பாய்கிறது. ராமநதி நிரம்பியதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்தவிடப்படுகிறது.
ராமநதி அணைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணை முழுவதுமாக நிரம்ப உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 350 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கனமழைக்கு ஏற்ப தண்ணீர் திறக்கும் அளவு அதிகரிக்கப்படலாம். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் ராமநதி ஆற்று ஓரங்களில் வசிக்கும் மக்கள் ஆற்று பகுதிக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அதேபோல் ஜம்பு நதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடையம் போலீஸ்நிலையம் வரை தண்ணீர் வந்தது.

கயைடம் ஆனைக்குட்டி குளம் நிறைந்து மறுகால் பாய்கிறது. இதனால் கீழப்பத்து காடு வயில்வெளி தண்ணீரில் மிதக்கிறது. அந்த பகுதியல் புதிதாக உருவான ரோஜா நகர் பகுதி வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது .
கடனாநதி அணையில்இருந்து விநாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இனால் கடனா நதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கடையம் -பொட்டல்புதூர் இடையே பல இடங்களில் சாலையில் தண்ணீர் ஓடுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *