கடையம், அம்பை ரெயில்வே பிளாட்பாரத்தை நீட்டிக்க எம்.பி. கோரிக்கை
1 min read
MP demands extension of Kadayam, Ambai railway platform
18.12.2024
தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ்வை நேரில் சந்தித்து, தென்காசி மாவட்டத்திற்கு தேவையான ரயில்வே திட்டம் சார்ந்த வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வேண்டி கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்தக் கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது;-
திருநெல்வேலி – தென்காசி இடையே உள்ள திருநெல்வேலி டவுன், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ரயில் நிலையங்களில் நடைமேடையின் தூரத்தினை 24 பெட்டிகள் நிற்கும் அளவிற்கு நீட்டிக்க வேண்டும்
தென்காசி ரயில் நிலையத்தில் புதிய நீரேற்றும் நிலையம் அமைத்து ரயில் முனையமாக மாற்றிட வேண்டும். கீழப்புலியூர் ரயில் நிலையத்திலிருந்து கடையநல்லூர் ரயில் நிலையத்திற்கு புதிய இணைப்பு பாதை அமைத்திட வேண்டும்
திருநெல்வேலி-தாம்பரம் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்கிட வேண்டும்.
மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது இயங்கி வந்த கொல்லம் பயணிகள் ரயிலை இயக்கிட தற்போது உடனடியாக இயக்கிட வேண்டும்.ஏற்கனவே ஓடிக் கொண்டிருந்த தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயிலையும் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலையும் நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும்
திருநெல்வேலி – கொல்லம் மீட்டர் கேஜ் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். ஏற்கனவே மூன்று முறை அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட தாம்பரம் – செங்கோட்டை- தாம்பரம் அந்தியோதயா ரயிலையும் மீண்டும் இயக்க வேண்டும்
செகந்திராபாத்- கொல்லம் சிறப்பு ரயிலுக்கு கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்கவும்
அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்த ஒன்றிய அமைச்சர் உடனடியாக செயல்படுத்தி தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரிடம் உறுதியளித்துள்ளார்.
தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் பொதுமக்களின் ரயில்வே தொடர்பான தேவைகளை அறிந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டதற்கு தென்காசி பாராளுமன்ற தொகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.