காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது ; தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
1 min read
A low pressure area is forming; there is a chance of moderate rain in Tamil Nadu
20.12.2024
தெற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் (டிச.,22) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தற்போது வடக்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று (டிச.,20) முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆந்திராவில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி நகரும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மதியம் 1:00 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.