June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மரணம்

1 min read

Former Haryana Chief Minister Om Prakash Chautala passes away

20.12.2024
ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா இன்று (டிச.,20) மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89.
இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவர் மற்றும் ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இவருக்கு (வயது 89) இவர் முன்னாள் துணை பிரதமரும், ஹரியானா மாநில முன்னாள் முதல்வருமான தேவிலாலின் மகன்களில் ஒருவர். சவுதாலா, 4 முறை ஹரியானா மாநில முதல்வராக பதவி வகித்துள்ளார்.
நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இன்று (வெள்ளிக்கிழமை) கர்னாலில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனை கொண்டு செல்வதற்குள் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

சவுதாலா, ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பான வழக்கில் 10 ஆண்டு காலம் சிறை தண்டனைக்கு ஆளானவர்; அந்த வழக்கில் ஜாமினில் வெளியே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *