June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

பா.ம.க. உட்கட்சி பூசல்: ராமதாஸ் – அன்புமணி பேச்சுவார்த்தை

1 min read

PMK internal dispute: Ramadoss – Anbumani talks

29/12/2024
டாக்டர் ராமதாஸ், காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார்.
கட்சி பதவியை விட்டுக்கொடுக்க முகுந்தன் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியானது.
விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நேற்று நடைபெற்ற பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார்.

இளைஞர் அணி தலைவராக முகுந்தனை முன்மொழிந்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிக்கு உறுதுணையாக இருப்பார் என்று ராமதாஸ் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் இருந்த அன்புமணி இடைமறித்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

உடனே குறுக்கிட்ட டாக்டர் ராமதாஸ், ”இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும், கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இல்லாவிட்டால் போங்கள் என்றார்.

இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் அன்புமணி, மேடையில் ஜி.கே.மணியிடம் இருந்து மைக்கை வாங்கி, ‘நான் பனையூரில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம்’ என்று ஆவேசமாக கூறினார்.

தொடர்ந்து அந்த மைக்கை தூக்கி வீசிவிட்டு கோபத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பா.ம.க. உட்கட்சி மோதல் தொடர்பாக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை பா.ம.க. தலைவர் அன்புமணி சந்தித்து பேசினார்.

அவருடன் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர் பாலு, வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி ஆகியோர் இருந்தனர்.

கட்சி பதவியை விட்டுக்கொடுக்க முகுந்தன் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியானது.

சமாதான பேச்சுவார்த்தைக்கு அன்புமணி பல நிபந்தனை விதித்துள்ளதாகவும், பேச்சுவார்த்தையில் பெரும்பாலும் சுமூக முடிவு எட்டப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *