July 31, 2026

Seithi Saral

Tamil News Channel

மதுரையில் இருந்து சென்னைக்கு 3-ம் தேதி நீதிப் பேரணி – அண்ணாமலை அறிவிப்பு

1 min read

Justice march from Madurai to Chennai on the 3rd – Annamalai announcement

31.1.2024
தமிழக பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி தி.மு.க.வைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க தி.மு.க. அரசு முயற்சி செய்வதையும் கண்டித்து, தமிழக பா.ஜ.க. மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் உமாரதி ராஜன் தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெற உள்ளது.
வரும் ஜனவரி 3 அன்று தொடங்கவிருக்கும் இந்தப் பேரணி, சென்னையில் நிறைவு பெறும்போது தமிழக கவர்னர் அவர்களைச் சந்தித்து, தமிழக பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் தங்கள் கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *