June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் 4 ஆயிரம் துணிப்பை வழங்கல்

1 min read

4,000 cloth bags distributed on behalf of the environmental organization in Tenkasi

28.3.2025
தென்காசி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஜயலெட்சுமி பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக 4 ஆயிரம் துணிப்பை வழங்கி வருவதை தொடர்ந்து செய்து வருகிறார்.அதன்படி முதல் துணிப் பையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்தை சந்தித்து அவரிடம் வழங்கினார்,

அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இரா.ஜெஸ்லின் தலைமையில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின்படி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழினியன் தலைமையில் தென்காசி புதிய பேருந்து நிலயத்திலும் பொதுமக்களுக்கும் துணி பைகளை வழங்கினார். இதை தொடர்ந்து 4000 துணிப்பைகள் தென்காசி மாவட்டதின் பல பகுதிகளிலும் வழங்கப்பட உள்ளது.

தென்காசி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்குவதில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சுற்றுச்சூழல் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விஜயலட்சுமி செய்து வரும் பணிகளை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *