தென்காசியில் பாஜக மண்டல், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை
1 min read
BJP Mandal and District leaders hold meeting in Tenkasi
21.4.2025
தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி புதிய மண்டல் தலைவர்கள், மற்றும் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் ,ஆலோசனை சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தென்காசி சேனை தலைவர் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமை தாங்கினார். முன்னாள் பொதுச் செயலாளர் பாலகுருநாதன், ராமநாதன், அருள்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி நகர தலைவர் ஜி.சங்கர சுப்பிரமணி யன் வரவேற்று பேசினார்.
முன்னாள் மாவட்ட பாஜக தலைவர்கள் ராமராஜா, அன்புராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர தலைவர் மந்திரமூர்த்தி, மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் கருப்பசாமி, துணைத்தலைவர் ராஜ்குமார், மாவட்ட துணை தலைவர் முத்துக்குமார், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ராஜ குலசேகர பாண்டியன், நகரத் துணைத் தலைவர் லட்சுமண பெருமாள், நாராயணன், நகரச் செயலாளர் விஸ்வநாதன், நகர் மன்ற உறுப்பினர் சுனிதா முத்து, மகளிர் அணி பொறுப்பாளர் குணசீலன், மேலகரம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் மகேஸ்வரன், கிளைத் தலைவர் கார்த்திக் சீனிவாசன், மற்றும் தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் புதிய மண்டல தலைவர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் அணி மற்றும் பிரிவு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மகளிர் அணியினருக்கு மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் சால்வை அணிவித்து கௌரவித்தார்.