தென்கா சிமாவட்டத்தில் 1589 கலைஞர் கனவு இல்லங்கள் கட்ட பணி ஆணை-அமைச்சர் வழங்கினார்
1 min read
Minister issues work order to construct 1589 artist dream homes in Tenka district
21.4.2025
தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கலைஞரின் கனவு இல்லத்திட்டத் தின் கீழ் 1589 பயனாளிகளுக்கு ரூ.55.61 கோடி மதிப்பிலான பணி ஆணைகளையும், மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் 733 பயனாளிகளுக்கு ரூ.9.36 கோடி மதிப்பிலான பணி ஆணைகளையும் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வ்ழங்கினார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்திற்குட்பட்ட கரிவலம்வந்தநல்லூர் நற்பவி அரங்கம். தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கம் மற்றும் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கம் ஆகிய இடங்களில் நேற்று ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கலைஞரின் கனவு இல்லத்திட்டம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் பணி ஆணைகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீகுமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர்.ஈ.ராஜா, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் ஆகியோர் முன்னிலையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 05 பயனாளிகளுக்கு தலா ரூ.5000/- வீதம் மொத்தம் ரூ.25,000/- மதிப்பிலான தேய்ப்புப் பெட்டிகளையும், 100 பயனாளிகளுக்கு சீர்மரபினர் நல வாரிய அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர்.ஏ.கே.கமல்கிஷோர் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீகுமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர்.ஈ.ராஜா , தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்ணான்டோ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் லாலா.சங்கரபாண்டியன், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன் முத்தையா பாண்டியன், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திவ்யா மணிகண்டன். குருவிகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி, தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் வல்லம் மு.ஷேக் அப்துல்லா. கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் காவேரி சீனித்துரை, கடையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் செல்லம்மாள், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுப்பம்மாள். செங்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமலைச்செல்வி, தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராமநாதன் (கடையம்). மாணிக்கவாசகம் (தென்காசி). ரவிச்சந்திரன் (குருவிகுளம்) செல்வராஜ் (மேலநீலிதநல்லூர்), அலைஸ் தாயம்மாள் (கிராம ஊராட்சி, ஆலங்குளம்).கல்யாண ராமசுப்பிரமணியன் (ஆலங்குளம்) செ.குழந்தைமணி (கீழப்பாவூர்), வி.பால்ராஜ் (கீழப்பாவூர்), கந்தசாமி(சங்கரன்கோவில்), ராதாதிருமலை (சங்கரன்கோவில்). மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் மாரிமுத்து மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
One attachment • Scanned by Gmail
| ReplyReply allForwardAdd reaction |