அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி – பரிசளிப்பு விழா
1 min read
Letter writing competition on behalf of the Postal Department – Prize giving ceremony
20.5.2025
இந்திய அஞ்சல் துறை சார்பில் நடத்தப்பட்ட கடிதம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய அஞ்சல் துறையானது சார்பில் கடந்த 14.09.2024 முதல் 31.01.2025 வரை ‘தாய் அகார் என்ற பெயரில் கடிதம் எழுதுதல் மகிழ்ச்சி – டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்* என்ற தலைப்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியை மாணவ , மாணவியர் களுக்கு நாடு முழுவதும் நடத்தியது.
அதில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில், கோவில்பட்டி ஸ்ரீ ஹரா வித்யா மந்திர் பள்ளியை சார்ந்த மாணவர் சசிவந்த் எழுதிய கடிதம் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டாம் பரிசு பெற்றது . அவருக்கு அஞ்சல் துறை சார்பில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூபாய் பத்தாயிரத்திற்கான காசோலையை கோவில்பட்டியில் வைத்து 17.05.2025 நடந்த விழாவில் கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் வழங்கினார்.
இந்த பரிசளிப்பு விழாவில் கடந்த நிதியாண்டு சிறப்பாக செயல்பட்ட அஞ்சலக ஊழியர்களுக்கும் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது . விழாவில் கோவில்பட்டி , சங்கரன்கோவில் , தென்காசி பகுதியில் உள்ள அஞ்சல் உபகோட்ட துணை கண்காணிப்பாளர்கள் , ஆய்வாளர்கள், தலைமை , துணை மற்றும் கிளை அஞ்சலக ஊழியர்கள், பெற்றோர்கள், வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.