June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

1 min read


Red alert for 2 districts in Tamil Nadu: Orange alert for 4 districts

24.5.2025
தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

8 நாட்கள் முன்னதாக தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
மத்திய கிழக்கு அரபி கடலில் உருவான காற்றழத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
தூத்துக்குடி, பாம்பனில் 3ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழை கொட்டும். இதனால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவையில் 27ஆம் தேதி மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) பெய்யும்.
கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது இந்தாண்டு மே வரையிலான காலத்தில் 92 சதவீதம் கூடுதலாக மழைப்பொழிவு பதிவு.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *