June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வங்கதேச ‘தேசத் தந்தை’ அந்தஸ்து பறிப்பு

1 min read

Bangladesh strips Sheikh Mujibur Rahman of ‘Father of the Nation’ status

5.6.2025
முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச அரசு, ஷேக் முஜிபுர் ரஹ்மானின் ‘தேசத்தந்தை’ என்ற பட்டத்தை திரும்பப் பெற்றுள்ளது.

சமீபத்தில் புதிதாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் இருந்து முஜிபுர் ரஹ்மானின் உருவப்படம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இடைக்கால அரசாங்கம் ‘தேசிய சுதந்திரப் போராட்ட கவுன்சில் சட்டத்தில்’ திருத்தம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் ஒரு சுதந்திர நாடாக உருவாவதற்குக் காரணமானவிடுதலைப் போராட்டம், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அழைப்பின் பேரில் நடத்தப்பட்டது.இது ஒரு தனி நாட்டை உருவாக்க வழிவகுத்தது.

விடுதலை காலத்தில் வங்கதேச அரசாங்கத்தில் இருந்தவர்கள், சுதந்திரப் போராளிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் தற்போது இடைக்கால அரசால், ‘விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்பாளர்கள்’ ஆக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் முஜிபுர் ரஹ்மானின் தேசத்தந்தை பட்டம் நீக்கப்பட்டாலும், அவரின் சுதந்திரப் போராட்ட வீரர் அந்தஸ்து தக்கவைக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *