August 30, 2026

Seithi Saral

Tamil News Channel

பா.ம.க.வை பலவீனப்படுத்த முயற்சிக்கும் தி.மு.க.: அன்புமணி குற்றச்சாட்டு

1 min read


DMK trying to weaken PMK: Anbumani alleges

16.6.2025
பா.ம.க.,வை பலவீனப்படுத்த தி.மு.க., முயற்சி செய்கிறது என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: –

பா.ம.க., விற்கு நான் துரோகம் செய்தால் அன்று என் கடைசி நாளாக இருக்கும். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தருகிறோம் என 4 ஆண்டுகளாக நம்பவைத்து கழுத்தை அறுத்து விட்டனர். மாநாட்டு கூட்டத்தை பார்த்து முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது.
கட்சிக்குள் நடக்கும் குழப்பங்களுக்கு தி.மு.க., தான் காரணம். இதை எல்லாம் உடைத் தெறிவோம். பா.ம.க.,வை பலவீனப்படுத்த தி.மு.க., முயற்சிக்கிறது. பா.ம.க.,வில் சில சூழ்ச்சிக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பது விரைவில் தெரியவரும். அமைதியாக இருப்பது எனது பலம்.
பா.ம.க., நடத்திய கூட்டத்தால் தி.மு.க.,வுக்கு வயிற்றெரிச்சல். கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் துணிச்சலும், திட்டமும் என்னிடம் உள்ளது. நான் எந்த தவறும் செய்யவில்லை. இருப்பினும் என் அப்பாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தி.மு.க., ஆட்சியில் குழந்தைகள் முதல் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அண்புமணி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *