உலகின் இளைய மன்னர் ஓயோ நியம்பா மரணம்
1 min read
World’s youngest king Oyo Nyimba passes away.
28.8.2028
உகாண்டாவைச் சேர்ந்த உலகின் இளைய மன்னரான டூரோ இராச்சியத்தின் ஓயோ நியம்பா தனது 34வது வயதில் காலமானார்.
உகாண்டா அரசர் ஓயோ நியம்பா தனது 34-வது வயதில் நேற்று இரவு காலமானதாக அவரது இராஜ்ஜியத்தின் பிரதமர் அறிவித்துள்ளார். ஓயோ நியம்பா (Oyo Nyimba), உகாண்டா அரசராக 1995-ல் அரியணை ஏறியதன் மூலம் உலகின் மிக இளைய மன்னராக அறிவிக்கப்பட்டார்.
உகாண்டா ஒரு குடியரசாகும், இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டுத் தலைவரால் ஆளப்படுகிறது, ஆனால் அது காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தில் இருந்ததைப் போலவே தங்கள் இராஜ்ஜியங்களின் மீது தொடர்ந்து ஆட்சி புரியும் பல பாரம்பரிய அரசுகளைக் கொண்டுள்ளது.
அமெரிக்காவில் தீவிர சிகிச்சையில் இருந்தபோது மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழப்புக்கான சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை. 1995ல் தனது 3வது வயதில் மன்னராகப் பொறுப்பேற்ற ஓயோ கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.