August 29, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆலங்குளம் அருகே பூ வியாபாரி வெட்டிக்கொலை

1 min read

Flower vendor hacked to death near Alankulam

16.6.2025
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை பகுதியில் பூ வியாபாரியை வெட்டிக் கொலை செய்த நபரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை பவுண்டு தெருவை சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் சுடர் வடிவேலு (வயது 57)
இவர் அந்தப் பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார் இன்று அதிகாலையில் சுடர் வடிவேலு அவரது வீட்டு அருகில் நின்று கொண்டிருந்தபோது மர்ம நபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இது பற்றி அந்தப் பகுதி பொதுமக்கள் ஊத்துமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுடர் வடிவேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உடனடியாக போலீஸ் நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது அந்த நாய் அங்கிருந்து சிறிது தூரம் வேகமாக ஓடிவிட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டது.

வெட்டிக்கொலை செய்யப்பட்ட சுடர் வடிவேலுவுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இவர் ஊத்துமலை பஸ் நிலையம் அருகே பூ வியாபாரம் செய்து வந்துள்ளார்.சம்பவ இடத்தில் ஊத்துமலை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இவருக்கும் இவரது உறவினர் ஒருவருக்கும் சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகம் அடைந்த இரண்டு நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள் இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *