July 16, 2025

Seithi Saral

Tamil News Channel

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதனின் மகன் ராஜா கைது

1 min read

Former AIADMK Minister S.P. Shanmuganathan’s son Raja arrested

17.5.2025
அதிமுக முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதனின் மகன் ராஜா. இவர் தூத்துக்குடி மாநகராட்சி 19-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் மீது இவருடன் உடன்பிறந்த அக்கா பொன்னரசி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.

தன்னிடம் ரூ.17 கோடி ரூபாய் ஏமாற்றியதாக ராஜா மீது அவரது சகோதரி புகாரளித்து இருந்தார். இந்த புகாரின் பேரில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், மலேஷியா தப்ப முயன்ற ராஜாவை, போலீசார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *