சுந்தரபாண்டியபுரம்: முதியோர் காப்பக பலி 5 ஆக உயர்வு
1 min read
Sundarapandiyapuram: Death toll at nursing home rises to 5
17.6.2025
தென்காசியில் சுந்தரபாண்டியபுரத்தில் தனியார் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் உணவு ஒவ்வாமையால் 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்கள் மதுரை மற்றும் தென்காசியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்களில் 3 பேர் பெண்கள். ஒருவர் ஆண் ஆவார்.
இந்த விவகாரத்தில், முதியோர் காப்பக நிர்வாகி ராஜேந்திரன், சாம்பவர்வடகரை போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். இதனால், முதியோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை விவகாரத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்து உள்ளது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேலும் 11 பேர் சிகிச்சையில் உள்ளனர்.