June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மு.க.ஸ்டாலின், சேகர்பாவுக்கு அழைப்பு

1 min read

MK Stalin invites Shekarpa to Muruga devotees’ conference

18.6.2025
கும்பகோணத்தில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மதுரையில் வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு மக்கள் வரக்கூடாது என தமிழக அரசு, காவல்துறை மூலம் மிரட்டுகிறது. வழிபாடு பாதயாத்திரை குழுக்களை போலீசார் செல்லக்கூடாது என கூறியுள்ளனர். அத்தனை தடைகளையும் மீறி, இந்த மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும். இந்த மாநாட்டிற்கு பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த அரசியல் சார்பற்ற ஆன்மீக மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, அமைச்சர்கள் சேகர்பாபு, துரைமுருகனிடம் நேரில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். மேலும், தமிழகம் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பலர் கலந்து கொள்கின்றனர்.

இதில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பங்கேற்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். நாம் இந்துக்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும். இந்த மாநாட்டில் பா.ஜ.க.வினரும் பங்கேற்கிறார்கள். இதில் அனைத்து அரசியல் கட்சியும் கலந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது/

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *