சாலையில் கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த கடையம் சிறுவர்கள்
1 min read
Kadayam boys hand over money lying on the road to the police
23/6/2025
தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் சாலையில் கண்டெடுத்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இரண்டு சிறுவர்களை கடையம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார் பாராட்டி அவர்களுக்கு வெகுமதி அளித்தார்.
கடையம் கருப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் தர்மர். இவருடைய மகன் அபிமன்யு. கருப்பசாமி என்பவரது மகன் பாலாஜி. அபிமன்யுவும் பாலாஜியும் நேற்று அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ரூ.100 கிடந்துள்ளது. அதனை எடுத்த அந்த சிறுவர்கள் கடையம் காவல் நிலையத்திற்குச் சென்று இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமாரிடம் அந்த பணத்தை ஒப்படைத்தனர். இருவரையும் பாராட்டிய இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் இருவருக்கும் தலா ரூ.100 அன்பளிப்பாக வழங்கினார். மேலும் போலீஸ் நிலையத்தில் இருந்த காவலர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.
இதுகுறித்து சிறுவர்கள் கூறுகையில் கடந்த
வியாழக்கிழமை பள்ளியில் உரையாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் உமா பொது இடங்களில் கண்டெடுக்கும் பொருட்கள் மற்றும் பணத்தை உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி னார். எனவே சாலையில் கண்டெடுத்த போலீசகடையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம்’ என்றனர்.
கடையம் பகுதியில் சாலையில் கண்டெடுத்த ரூ.100ஐ காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.