June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

மாம்பழ விவவாயிகள் துயர்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

1 min read

M.K. Stalin’s letter to Prime Minister Modi on the plight of mango farmers

24.6.2025
மாம்பழங்களை உரிய விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடி, மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகியுள்ள மாம்பழங்களை உரிய விலையில் மத்தியக் கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிட வேண்டும்.
மாம்பழச் சாறு தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் சேர்க்க வேண்டிய மாம்பழக் கூழ் அளவு உள்ளிட்ட #FSSAI தரக்கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்திட வழிகாட்டுதல்கள் வழங்கிடவும், மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டி-யை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைத்திட வேண்டும்.
பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு 50:50 பகிர்வுமுறையில் மாநில அரசும் மத்திய அரசும் இழப்பீடு வழங்கிட ஏதுவாகத் தமிழ்நாட்டில் PM-AASHA சந்தைத் தலையீட்டுத் திட்டத்தைச் (MIS) செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *