June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் – கல்லூரி சந்தை

1 min read
Sri Parasakthi Women's College, Courtallam - College Market 
13.7.2025
தென்காசி மாவட்டம், ற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் வணிகவியல் உயராய்வு மையம் கல்லூரியின் தொழில் முனைவோர் மையம் மற்றும் புத்தாக்க மையத்துடனும் மேலும் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இயங்கும் மகளிர் திட்டம், தென்காசி மாவட்டத்துடனும் இணைந்து கல்லூரி சந்தை மூன்று நாட்கள் நடைபெற்றது.

கல்லூரி சந்தையை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ. கே.கமல் கிஷோர் திறந்து வைத்தார். சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் உருவாக்கிய பொருட்களை காட்சிப்படுத்த மாவட்ட ஆட்சியர் பொருட்களை வாங்கி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். தென்காசி , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்ற இயக்குனர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ , இந்த நிகழ்ச்சியை வழிநடத்தினார். உதவி திட்ட இயக்குனர் மாரீஸ்வரன் அனைத்து சுயஉதவி குழுக்களையும் ஒருங்கிணைத்த சிறப்புடன் செயல்பட முக்கிய பங்கேற்றினர். தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்ட்டனர் மேலும் மொத்தமாக 36 நிலையகங்கள் செயல்பட்டன. கல்லூரி சந்தை யில் கைவினை பொருட்கள், மாணவிகளை கவர்ந்து இழுக்கும் வகையில் ஆபரணங்கள், சத்தான சிற்றுண்டிகள், கரும்புச்சாறு, கைத்தறி புடவைகள் போன்று பலவிதமான பொருள்களை விற்பனை செய்தனர்.

சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் வணிகவியல் உயராய்வு மையத்தின் மாணவிகள் தன்னார்வத்துடன் உதவிபுரிந்தனர். கல்லூரி முதல்வர் முனைவர், எஸ்.அமிர்தவல்லி வழிகாட்டுதலின் கீழ் வரலாற்றுத் துறையின் கௌவுரவ விரிவுரையாளர் செல்வி.வெங்கடேஸ்வரி, அத்துறையின் மாணவிகளுடன் பெண் தொழில்முனைவோரின் சமூக-பொருளாதார நிலைமைகளை பகுப்பாய்வு செய்ய தரவுகளை சேகரித்து கல்லூரி சந்தையை ஆய்வுக்களமாக பயன்படுத்தினர், மூன்று நாட்களின் முடிவில் மொத்தமாக ஐந்து லட்சத்தி இருப்பத்தி ஐந்தாயிரம்
ரூபாய்க்கு விற்பனை அமோகமாக நடந்தது.

கல்லூரியின் அனைத்து துறை மாணவியரும் தங்களுக்கான ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்து பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைந்தார்கள். வணிகவியல் உயராய்வு மையம், சக்தி ரோட்டரி கிளப் ஆப் குற்றாலத்துடன் இணைந்து நிறைவு விழா நடத்தியது. நிறைவு விழாவில் அழகர்ராஜா,சக்தி ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் தலைவர் கே.பவானி செயலாளர் சக்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வினை சிறப்பாக நடத்த வழிகாட்டியாக இருந்த முனைவர் இரா.மாலினி அவர்களுக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் சிறப்பு செய்து கௌவரவித்தார். நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.அமிர்தவல்லி பெண்தொழில் முனைவோர் குறித்தும் விரல்கள் பத்தும் நமக்கு மூலதனம் அதற்கு இதுவே உதாரணம் என கல்லூரி சந்தையினை மேற்கோள் காட்டினார். அதிக அளவில் விற்பனை செய்த நிலையகத்திற்கு மகளிர் திட்ட அலுவலகம், தென்காசி பரிசினை வழங்கியது.

முதல் பரிசினை திருச்சி மாவட்டம் இதயம் சுய உதவிக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரியும், இரண்டாம் பரிசினை தென்காசி மாவட்டம் செம்பருத்தி சுயஉதவிக்குழு உறுப்பினர் காளியம்மாளும் மற்றும் மூன்றாம் பரிசினை மதுரை மாவட்ட அன்னை தெரசா சுய உதவிக்குழு அன்னை தெரசா வசந்தா ஆகியோர் பெற்றனர்.

இதில் சிறப்பாக செயல்பட்ட நிலையகங்களுக்கு சிறப்பு பரிசினை ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியை
மற்றும சக தி ரோட்டரி கிளப் ஆப் உறுப்பினர் முனைவர் அனுஜா சிறந்த நிலையகமாக கைவினைப்பொருட்களை
திறமையாக கையாண்ட
ஸ்ரீ ஜெயம் சுய உதவிக்குழு உறுப்பினர் சண்முகத்தாய், கரம்புச்சாறு விற்பனை செய்த பாவூர்ச்சத்திரம் தேவி சுய உதவுக்குழு உறுப்பினர்க்கும், சத்தான உணவு விற்பனை செய்த குத்துக்கல்வலசை வான்மதி சுயஉதவிக்குழு உறுப்பினர் சுபாவுக்கும் வழங்கி கௌவரவித்தார்.

வணிகவியல் உயராய்வு மையத்தின் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி பி. முபீனா மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவி மாரியம்மாள் (எ) சசி தன்னார்வத்துடன் சிறப்பாக பங்காற்றியதற்காக சிறப்பு பரிசினை பெற்றனர். சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர் மேலும் மாணவியரின்
பங்கினையும் அவர்களின் உதவினையும் நெகிழ்ச்சியாக எடுத்துரைத்தனர். கல்லூரி நிர்வாகத்திற்கும், வணிகவியல் உயராய்வு மையம்திற்கும், ஏனைய உறுப்பினர்களுக்கும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியினை தெரிவித்தனர்.

வணிகவியல் உயராய்வு மைய இணைப்பேராசிரியர் மற்றும் தொழில்முனைவோர் மைய ஒருங்கிணைப்பாளரான முனைவர்.இரா.மாலினி மூன்று நாட்களில் நடந்த நிகழ்வினை எவ்வாறெல்லாம் நடந்தது என்பதனை குறித்த சிறப்பணிகளை தொகுத்து கல்லூரி வரலாற்றில் இந்நிகழ்வு ஒரு மைல் கல் என எடுத்துரைத்தார் மேலும் ஆர்வத்துடன் ஈடுப்பட்ட சுயஉதவிக்குழுக்களுக்கு நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். இக்கல்லூரி சந்தையானது சுயஉதவிக்குழுக்களுக்கு ஒரு சிறந்த தளமாகவும் எதிர்கால தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தது. கல்லூரி சந்தைக்கான ஏற்பாடுகளை வணிகவியல் உயராய்வு மையம் கல்லூரியின் தொழில் முனைவோர் மையம் மற்றும் புத்தாக்க மையம் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *