June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

காமராஜரின் உயரிய சிந்தனைகள் ஊக்கமளிக்கும்- பிரதமர் மோடி பதிவு

1 min read
Kamaraj's lofty thoughts will inspire us - PM Modi posts 
15.7.2025
தமிழ்நாட்டை 9 வருடங்கள் ஆட்சி செய்த பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாளான நேற்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. அரசியல் தலைவர்கள், காமராசரின் புகழை போற்றி வருகின்றனர். இந்த நிலையில், காமராசரின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"கே. காமராஜ் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அவர், சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் வளர்ச்சிக்குரிய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கினார். அவரது உயரிய சிந்தனைகளும், சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும். "

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *