June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

எடப்பாடி பழனிச்சாமி வாயிலிருந்து பொய்யே வருகிறது- மு.க.ஸ்டாலின் பேச்சு

1 min read
Lies are coming from Edappadi Palaniswami's mouth - MK Stalin's speech 
16/7/2025
மயிலாடுதுறையில் ரூ.48 கோடியில் 47 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிய வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.113.51 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

விமர்சனம் என்கிற பெயரில் நமக்காக விளம்பரம் செய்யும் இ.பி.எஸ்-க்கு நன்றி.
தேர்தலுக்கு முன் பெட்சீட் போட்டு வாங்கிய மனுக்களை எக்ஸல் ஷீட்டாக மாற்றி வொர்க் ஷீட்டாக மாற்றினேன்.
மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட தி.மு.க. அரசின் அனைத்து திட்டங்களும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களையும் சென்றடைகிறது.
தமிழக மக்கள் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமிக்கு (இ.பி.எஸ்.) டாடா, பை - பை சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர்.
சுந்தரா டிராவல்ஸ் போல் ஒரு பேருந்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் இருந்து புகை வருவது போல் இ.பி.எஸ். வாயிலிருந்து பொய்யாக வருகிறது.

உங்கள் குடும்ப நலனுக்காக டெல்லி சென்று அ.தி.மு.க.வை அடகுவைத்தவர் எடப்பாடி பழனிசாமி.
ரெய்டில் இருந்து குடும்பத்தை காக்கவே இ.பி.எஸ். அமித்ஷா வீட்டின் கதவை தட்டினாரே தவிர நமது மக்களுக்காக அல்ல.

சொந்த கட்சியினரான அ.தி.மு.க.வினரே எடப்பாடி பழனிசாமியை நம்பாதபோது தமிழக மக்கள் எப்படி நம்புவர்?
குடும்பத்தை காப்பாற்ற டெல்லியின் சதுரங்க வேட்டையில் சிக்கி தொண்டர்களை ஏமாற்றினார் இ.பி.எஸ்.
தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் அ.தி.மு.க.-வினர் வீட்டுக்கும் போவதை இ.பி.எஸ்.-ஆல் மறுக்க முடியுமா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து இ.பி.எஸ். அவதூறு பரப்பி வருகிறார்.

நம்மை ஒருபோதும் ஸ்டாலின் கைவிட மாட்டார் என தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்து அமைய போவதும் திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் என்பதை உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்
முன்னதாக நேற்று பூம்புகார் சாலை முதல் கச்சேரி சாலையில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றம் வரை சாலை வலம் நடைபெற்றது. சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *