சேவாலயா ஆண்டு விழா- ஆதரவாளர்களுக்கு விருது
1 min read
oplus_131074
Sevalaya Award-Kadayam Kalyani Sivagami Nathan received
22.72025
சேவாலயாவின் ஆதரவாளர் விருது கடையம் திருவள்ளுவர் கழக செயலாளர் கே.எஸ்.கல்யாணி சிவகாமி நாதன் பெற்றார்.
சென்னை திருநின்றவூர் அருகே காசுவா கிராமத்தில் சேவாலயா என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு பிளஸ்-2 வகுப்பு வரை பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. அங்கு படிக்கும் ஏழை மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக பாடம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அந்த பள்ளிக்கூடம் அரசு நிதிஉதவி பள்ளிக்கூடமும் அல்ல. ஆனாலும் மாணவர்களுக்கு பாடபுத்தகம், இலவச சீருடை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மேலும் சுற்றுப்புற கிராமங்களுக்கு சென்று மாணவர்களை கட்டணம் இன்றி வாகனத்தில் அழைத்து வருகிறார்கள்.
இதுதவிர அங்கு முதியோர் இல்லம், இலவச மாணவர் விடுதி, இலவச மாணவியர் விடுதி, கோசாலை, இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்தப்படும் விவசாய பண்ணை ஆகியவை உள்ளன.

இந்த சேவாலயாவின் மையம் தமிழகத்தின் பல இடங்களிலும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் சேவை செய்து வருகிறது.
இந்த சேவாலயா அமைப்புதான் கடையத்தில் பாரதியார்-செல்லம்மாள் சிலையை நிறுவியதோடு நூல்நிலையம், கலையரங்கம் கட்டிக் கொடுத்துள்ளது.

சேவாலயாவின் 37-வது ஆண்டு விழா நேற்று ( 21.7.2025) நடந்தது. சந்தீப்பாபு தலைமை தாங்கினார்.
விழாவில் சேவாலயா நிறுவனர் முரளிதரன் வரவேற்று பேசினார்.
சேவாலயாவின் சேவைகளை மாணவ-மாணவிகள் நடன நிகழ்ச்சியுடன் விளக்கி காட்டியது சிறப்பாக இருந்தது.
பள்ளியில் சிறந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற ஒரு மாணவர், ஒரு மாணவிக்கு மேற்கல்விக்காக தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.
மேலும் சேவாலயாவில் பணியாற்றுவோருக்கும் அவர்களுடைய சேவை பாராட்டி விருது வழங்கப்பட்டது.
இதுதவிர சேவாலயா அமைப்புக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் எட்டு பேருக்கு ஆதரவாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை கடையம் திருவள்ளுவர் கழக செயலாளர் கே.எஸ்.கல்யாணி சிவகாமி நாதன் மற்றும் டாக்டர் மீரா, ஸ்ரீராம், சிலம்பரசன், யுவராஜ், ஆதிலிங்கம், மதுசூதனன் ஆகியோர் பெற்றனர். முன்னதாக பாரதியார், மகாத்மா காந்தி, விவேகானந்தர் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் பாரதியார் படத்திற்கு கல்யாணிசிவகாமிநாதன் மாலை அணிவித்தார். காந்தி படத்திற்கு கர்நாடகா மதுசூதனனும் விவேகானந்தர் படத்திற்கு தூத்துக்குடி ஆதிலிங்கமும் மாலை அணிவித்தனர்.. விழாவில் சேவாலயாவின் 37 வது ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக திருவள்ளூர் மாவட்ட வள்ளலார் அருள் நிலையத்தின் நிர்வாக இயக்குநர் எல். சுப்ரமணி மற்றும் பசுவமேனன், ராஜலிங்கம், விஜய்மோகன்,சம்பத்குமர் உள்பட பலர் கலந்து கொண்டனர். சேவாலயாவின் நிறுவனர் முரளிதரன், புவனா முரளிதரன் ஆகியோருடைய சேவையை பலர் பாராட்டி பேசினார்கள். விழாவில் சிறப்பு விருந்தினர் சேன்ட்டி பாபு பெஷவாடா தனது நி’றுவனத்தின் மூலம் சேவாலயா மாணவர்களின் கல்வி திட்டங்களுக்கு 55 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு உதவி செய்வதாக அறிவித்தார். சேவாலயா சேவைகளை அனைவரும் பாராட்டினார்கள்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டது.
