June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியை நேரில் சந்திக்க டிரம்ப் விருப்பம்

1 min read

Trump wants to meet with Iranian Supreme Leader Mojtaba Khamenei in person

4.6.3026
ஒருபுறம் தாக்குதல் தீவிரமடைந்து வரும் சூழலில் மறுபுறம் ஈரானுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனியை எதிர்காலத்தில் தான் நேரில் சந்திக்க வாய்ப்புள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் நாட்டின் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனியிடமே உள்ளதாகத் தான் நம்புவதாகவும், அவருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

“நான் அவரை நேரில் சந்திக்க விரும்புகிறேன். சூழ்நிலைகள் எவ்வாறு அமைகின்றன என்பதைப் பொறுத்து, நாம் ஒரு கட்டத்தில் கண்டிப்பாகச் சந்திப்போம்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் போர் வெடித்த முதல் நாளே (பிப்ரவரி 28), அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் அப்போதைய உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

அதன் பின்னர், அவரது மகன் மொஜ்தாபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றார்.

தற்போதைய ராணுவ நடவடிக்கை மற்றும் பேச்சுவார்த்தையில் அவரே முதன்மை முடிவுகளை எடுத்து வருகிறார். இருப்பினும் அவர் அமெரிக்க தாக்குதலில் கடுமையாக காயம்பட்டுள்ளதாகவும் மேற்கத்திய ஊடகங்கள் கூறி வருகின்றன.

போர் தொடங்கியதில் இருந்து மொஜ்தபா பொதுவெளியில் தோன்றாததே இதற்கு காரணம். அறிக்கைகள் மூலமே அவர் இதுவரை தனது முடிவுகளை அறிவித்து வருகிறார்.

இதுகுறித்து டிரம்ப் பேசுகையில், “அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக நான் கேள்விப்படவில்லை. வெளியாகும் கதைகளை வைத்து பார்த்தால், அவர் தனது உடலின் பல்வேறு உறுப்புகளை இழந்துள்ளதாகத் தெரிகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *