June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

ரூ. 80 லட்சம் பள்ளிகட்டிடம் திறப்பு விழா

1 min read

Rs. 80 lakh school building inauguration ceremony

23.7.2025

 கடையநல்லூர்  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய்  கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தை செய்தியாளர்களை வைத்து திறக்க வைத்த சட்டமன்ற உறுப்பினர் செ. கிருஷ்ண முரளி (எ)குட்டியப்பா.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செங்கோட்டை எஸ் எம் எஸ் எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ 80 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் பள்ளியின் முகப்பு பகுதியில் பேவர் ப்ளாக் தரை தளம் அமைக்கப் பட்டுள்ளது, 

இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு தென்காசி  வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி(எ) குட்டியப்பா தலைமை தாங்கினார். பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் ஜவஹர்லால்நேரு, செயலாளர் கோ.ராமசாமி நன்கொடையாளர் சாகுல், பள்ளி மேலாண்மைக் குழு  தலைவர் முருகேஸ்வரி, ஆசிரிய பிரதிநிதி அனுசியா , ஹசினாநிலோபர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பள்ளித் தலைமையாசிரியர் சுந்தர குமார் வரவேற்றுப் பேசினார். 

இந்த நிகழ்ச்சியில் பள்ளி கட்டிடத்தை செய்தியாளர்களை வைத்து ரிப்பன் வெட்டி திறந்து வைக்க செய்தார், அதே போல் மற்றொரு கட்டிடத்தை மூத்த குடிமக்களை வைத்து திறந்து வைக்க செய்தார். கூட்டத்தில் பேசிய கடையநல்லூர் எம்எல்ஏ செ கிருஷ்ணமுரளி  வருங்கால இந்தியாவை வழி நடத்தக் கூடிய மாணவ செல்வங்கள் கல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்த நடைமுறையை கையாண்டு செயல்பட வேண்டும், நீங்கள் நிற்கும் இதே இடத்தில் தான் நானும் நின்றேன். இன்று இந்த நிலையில் உள்ளேன். இது போன்ற நல்ல விஷயங்களை எடுத்துக்காட்டாக எடுத்து கொண்டு நீங்கள் சிறந்த முறையில் கல்வியில் கவனம் செலுத்தி ஐஏஎஸ் ஐபிஎஸ் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் அலங்கரிக்க வேண்டும். 

இந்த பள்ளிக்கு என் தந்தை செந்தூர்பாண்டியன்  அமைச்சராக இருந்த போதும் சரி தற்போது நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிற போதும் பள்ளிக்கு தேவையான கட்டிடங்கள், வகுப்பறைகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு செயல்படுத்தினாலும் கலையரங்கம் வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதனை விரைவில் பரிசீலனை செய்து கழக ஆட்சி அமைந்த உடன் அந்த கோரிக்கையையும் நிறைவேற்றி தருகிறேன். என்று பேசினார்.

 இந்நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர் பொய்கை சோ மாரியப்பன், செங்கோட்டை நகர கழக செயலாளர் கணேசன்,  ஞானராஜ்,  சக்திவேல், மைதின்பிச்சை , முதலான அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வை தமிழாசிரியர் சிவசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார் .

இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிச் ஆசிரியர்கள் செயலாளர் குமார், ஸ்டாலின் , முருகேசன், பாலகிருஷ்ணன் ரவிசங்கர், முத்துக்குமரேசன், ராஜ்குமார், சுடர்மணி, சஞ்சய்காந்தி முதலானோர் செய்திருந்தனர்.விழாவில் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியைகள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளி உதவித் தலைமையாசிரியர் ஜோதிலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்.

2 Attachments • Scanned by Gmail

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *