குற்றாலம் சாரல் திருவிழா படகு போட்டி – பரிசளிப்பு விழா
1 min read
Courtallam Charal Festival Boat Race – Prize Giving Ceremony
23.7.2025
குறறாலம் சாரல் திருவிழாவில் நேற்று ஐந்தருவி படகு குழாமில் ஆண்கள், மற்றும் பெண்களுக்கான படகு போட்டிகள் நடைபெற்றது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் பரிசு வழங்கி பாராட்டினார்.
குற்றால சீசனுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சாரல் திருவிழா நடத்தப்படு கிறது. இந்த ஆண்டு சாரல் திருவிழா கடந்த 20ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. தினமும் ஒவ்வொரு போட் டிகளும் நடத்தப்படுகிறது.
நேற்று ஐந்தருவி செல் லும் வழியில் உள்ள வெண் ணமடை குளத்தில் படகு போட்டிகள் நடந்தது. போட் டிகள் ஆண்களுக்கு தனியாக வும், பெண்களுக்கு தனி யாகவும் நடத்தப்பட்டன. போட்டியை மாவட்ட சுற்று லாத்துறை உதவி அலுவலர் சந்திரகுமார், தமிழ்நாடு ஓட் டல் மேலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த போட்டிகளில் பெண்கள் ஆண்களுக்கு இரு நபர் கொண்ட ஆறு படகுக ளில் போட்டியாளர்கள் பங் கேற்றனர். பெண்கள் போட் டியில் சென்னையை சேர்ந்த சந்தியா, லெட்சுமி குழுவினர் முதலிடத்தையும், குற்றாலம் ஐந்தருவி பகுதியைச் சேர்ந்த இசக்கியம்மாள், அகல்யா குழுவினர் இரண்டாமிடத் தையும், மேலமெஞ்ஞான புரத்தைச் சேர்ந்த புனிதா, கீர்த்திகா குழுவினர் 3வது இடத்தையும் பிடித்து வெற்றி
பெற்றனர்.
பெண்கள் பிரிவில் நடந்த படகு போட்டியில் வெற்ற பெற்ற சென்னையைச் சேர்ந்த சந்தியா, லெட்சுமி குழுவினருக்கு பழனி நாடார் எம்எல்ஏ பரிசு வழங்கினார்.
குற்றாலம் சாரல் திருவிழாவை முன்னிட்டு ஐந்தருவி வெண்ணமடை படகு குழாமில் ஆண்களுக்கான படகு போட்டி நடந்தது.
குற்றாலத்தைச் சேர்ந்த நடத்தப்பட்டஸவசந்த கணேசன் குழுவினர் முதலிடத்தையும், காடை என்ற அருண்ராஜ், பிரசாத் குழுவினர் இரண்டாமிடத்தையும், மதுரையைச் சேர்ந்த கண்ணன், கரிலிக்காஷ் குழு வினர் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பழனி நாடார் எம்எல்ஏ பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி வட்டார காங்கிரஸ் தலைவர் குற்றாலம் பெருமாள், நகரத் தலைவர் துரை, சண்முகவேல், பிரபாகரன் மற்றும் படகு குழாம் பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்