தேசப்பற்றில் தமிழர்கள் ஒன்றும் குறைந்தவர்கள் கிடையாது -பாராளுமன்றத்தில் கனிமொழி பேச்சு
1 min read
Tamils are no less patriotic – Kanimozhi’s speech in Parliament
29.7.2025-
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டை எந்தவிதத்திலும் தமிழ்நாடு விட்டுக்கொடுத்ததில்லை.
எங்களுக்கு தேசப்பற்று இல்லை என்பது போல் அமித்ஷா பேசுகிறார்.
ஆளுங்கட்சியை சேர்ந்தோர் எப்போதும் நேருவை பற்றி பேசுவதால் இளைஞர்கள் நேருவை குறித்து படிக்கின்றனர், அதற்கு நன்றி. அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டோர் குறித்த விமர்சனங்களால் மாணவர்கள் அவர்களை குறித்தும் அதிகம் படிக்கிறார்கள். நேருவை காங்கிரசை விட பா.ஜ.க. தான் அதிகம் நினைவில் வைத்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக குழு அமைத்து அனுப்பியதற்காக மத்திய அரசுக்கு நன்றி. முதன்முறையாக பா.ஜ.க. எதிர்க்கட்சியினர் மீது நம்பிக்கை வைத்து குழு தலைவர்களாக வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்பு தந்ததற்கு நன்றி.
ஆனால் வெளிநாட்டிற்கு சென்று விளக்க வேண்டிய நிலை வராமல் இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
தீவிரவாத தாக்குதலில் உயிர்பலி ஏற்பட்டதால் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆபரேஷன் சிந்தூருக்காக முதன்முறையாக ஆதரவு பேரணி நடத்தியவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டும் வகையிலேயே அமித்ஷாவின் பேச்சு இருந்தது.
தேசப்பற்றில் தமிழர்கள் ஒன்றும் குறைந்தவர்கள் கிடையாது.
தேர்தல் நடைமுறை, ஜனநாயகத்தை காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் வந்தார். கங்கையை வெல்வான் தமிழன்.
இவ்வாறு அவர் கூறினார்.