தென்காசி குளத்தில் வடமலைப்பட்டி விவசாயி பிணம்
1 min read
Dead body of Vadamalaipatti farmer found in Tenkasi pond
1.8.2025
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வடமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தென்காசி பகுதியில் உள்ள வண்ணான்குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடையம் அருகே உள்ள வடமலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 67). விவசாயியான இவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.
செல்லத்துரை கடந்த சில மாதங்களுக்கு முன் கீழே விழுந்ததில் அவரது தலையில் அடிபட்டதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மீண்டும் தலையில் வலிப்பதாக கூறி தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். நான்கு நாட்கள் சிகிச்சையில் இருந்து குணமான நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ் சார்ச் செய்ய கூறியுள்ளனர்.
அப்போது அவரது 2-வது மகன் ஆஸ்பத்திரியில் மருந்துகள் வாங்குவதற்காக சென்றார். இதனால் செல்லத்துரை தான் சிகிச்சை பெற்ற அறையின் அருகில் அமரவைக்கப்பட்டார்.
பின்னர் மருந்துகளை வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்த போது தனது தந்தையை காணாமல் அதிர்ச்சி அடைந் தார். ஆஸ்பத்திரி முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து தென்காசி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை யில் தென்காசி மலையான் தெரு பகுதியில் உள்ள வண் ணான் குளத்தில் அடையாளம் தெரியாத ஒரு ஆண் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்த தென்காசி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டபோது அவர் ஆஸ்பத்திரியில் காணாமல் போன விவசாயி செல்லத் துரை என்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.