June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் பெரும்பாலான அஞ்சலகங்களில் நாளை பரிவர்த்தனை நடைபெறாது

1 min read

Transactions will not take place tomorrow at most post offices in Tamil Nadu

1.8.2025
தமிழகத்தில் பெரும்பாலான அஞ்சலகங்கள் நாளை பரிவர்த்தனை நடைபெறாது என அறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“அஞ்சல் துறையின் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் 2.0 தபால் நிலையங்களில் வரும் 4-ந்தேதி முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து 2-ந்தேதி(நாளை) பரிவர்த்தனைகள் நடைபெறாத நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நாளை தமிழகத்தில் பெரும்பாலான அஞ்சலகங்களில் எந்த ஒரு தபால் சேவையும் மேற்கொள்ளப்படமாட்டாது.

ஆகவே பொதுமக்கள் இந்த சேவை இல்லாத நாளை கணக்கில் கொண்டு, தங்களின் அஞ்சல் சேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் ஏற்கனவே நடைமுறைபடுத்தப்பட்ட தபால்நிலையங்கள் இயங்கும் என்று தெரிகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *