August 20, 2026

Seithi Saral

Tamil News Channel

எம்.எஸ்.பாஸ்கர் நடித்த பார்க்கிங் படத்திற்கு 3 விருதுகள்

1 min read

Parking, starring M.S. Bhaskar, wins 3 awards

1.8.2025
2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. 71-வது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
சர்ச்சையை கிளப்பிய “தி கேரளா ஸ்டோரி” படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.
சிறந்த மலையாள திரைப்படமாக உள்ளொழுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அனிமல் திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான தேசிய விருதுகள் வென்றுள்ளது.

கிறிஸ்டோ டோமி இயக்கத்தில் கடந்த 2024 ஆண்டு வெளியானது உள்ளொழுக்கு. இப்படத்தில் ஊர்வசி மற்றும் பார்வதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இப்படம் மாமியார் மற்றும் மருமகளிடயே உள்ள உறவை சொல்லும் திரைப்படமாக உருவானது. படத்தின் இசையை சுஷின் ஷ்யாம் மேற்கொண்டார்.
இந்தியில் சிறந்த நடிகர் விருது – ஷாருக்கான் (ஜவான்) மற்றும் விக்ராந்த் மாஸி (12 பெயில்)க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகை விருதை வென்றார் ராணி முகர்ஜி (படம்: சாட்டர்ஜி vs நார்வே) அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்க்கிங் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த பார்க்கிங் திரைப்படம் வென்றுள்ளது. இப்படத்தை ராம் குமார் பால கிருஷ்ணன் எழுதி இயக்கினார். சிறந்த துணை நடிகருக்கான விருதை பார்க்கிங் திரைப்படத்திற்காக எம்.எஸ் பாஸ்கர் வென்றுள்ளார். சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதை ராம்குமார் பால கிருஷ்ணன் பார்க்கிங் திரைப்படத்திற்காக வென்றுள்ளார்.

சிறந்த பாடலுக்கான விருதை வாத்தி பாடலுக்கு ஜி.வி பிரகாஷ் வென்றுள்ளார். லோகியின் மொரட்டு சம்பவம் லோடிங் – கூலி படத்திற்கு A சான்றிதழ்
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. திரைப்படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகளால் உருவாகி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பல மடங்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களில் இப்படத்திற்கு தான் முதல் ஏ சான்றிதழ் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *