June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை, தென்காசியில் மின்வாரிய குறைதீர்க்கும் கூட்டங்கள்

1 min read

Electricity Board grievance redressal meetings in Nellai and Tenkasi

2.8.2025
திருநெல்வேலி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலங்களில் பின்வரும் நாட்களில் காலை 11 மணியளவில் மின்சார வாரியம் சார்ந்த குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்படும்.

அதன்படி வருகிற 5.8.2025, முதலாவது செவ்வாய்கிழமையன்று வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 8.8.2025, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 12.8.2025, இரண்டாவது செவ்வாய்கிழமையன்று தென்காசி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 19.8.2025 மூன்றாவது செவ்வாய்கிழமையன்று திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 22.8.2025, நான்காவது வெள்ளிக்கிழமையன்று திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 26.8.2025, நான்காவது செவ்வாய்கிழமையன்று கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 29.8.2025, ஐந்தாவது வெள்ளிக்கிழமையன்று கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும் காலை 11 மணியளவில் மின்சார வாரியம் சார்ந்த குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *