June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா

1 min read

World Breastfeeding Week Celebration at Tenkasi District Government Hospital

2.8.2025
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்
உலக தாய்ப்பால் வார விழா தொடங்கியது. தென்காசி மாவட்ட குழந்தைகள் மருத்துவ சங்க தலைவர் மருத்துவர் அப்துல் அஜீஸ் கலந்து கொண்டார்.

நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற்று வரும் தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு நிகழ்சிகள் ஏற்பாடு செய்து உள்ளனர். அதன்படி நேற்று தாய்ப்பால் வார விழாவின் துவக்க விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற தாய்ப்பால் வார விழாவின் முதல் நாள் நிகழ்ச் சிக்கு தென்காசி அரசு தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவர்டாக்டர் செல்வபாலா தலைமை தாங்கினார்.டாக்டர்
புனிதவதி முன்னிலை வகித்தார். தென்காசி மீரான் மருத்துவமனை நிறுவனர் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் அப்துல் அஜீஸ் நிகழ்ச்சியை துவக்கி வைத்து தாய்ப்பாலின் அவசியம் பற்றியும், தாய்ப்பால் வார விழா பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் பேசினார்.
தாய்ப்பால் தனித்தன்மை வாய்ந்தது. அதில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருக்கும் என்பதை விளக்கி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இரா.ஜெஸ்லின், குற்றாலம் ரோட்டரி சக்தி கிளப் சார்பில் அழகரசி முத்தையா, விஜயலட்சுமி, பவானி இராமலட்சுமி, அரசு மருத்துவமனையில் பேறுகால ஆன பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட தாய்மார்கள் பயிற்சி செவிலியர்கள்,
கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *