June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு: அமலாக்கத்துறைக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம்

1 min read

Akash Bhaskaran case: Enforcement Directorate fined Rs 30,000

6.8.2025
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மாா்ச் மாதம் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினா். இதன் அடிப்படையில், தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின்போது, லேப்டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய அமலாக்கத் துறை அதிகாரிகள், விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு ‘சீல்’ வைத்தனா். இதை எதிா்த்து, சென்னை ஐகோர்ட்டில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் தரப்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்ட மனுதாரா்களுக்கு எதிராக அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. அதோடு அவர்களின் அலுவலகங்களுக்கு சீல் வைத்ததையும் ரத்து செய்யச் சொல்லி உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், பதில் மனு இன்னும் தயாராகவில்லை என்பதால் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஏற்கனவே இரண்டு முறை அவகாசம் வழங்கிய பின்னரும் ஏன் இன்னும் பதில் மனுத்தாக்கல் செய்யாதது சரியான நடவடிக்கை அல்ல என்றும் கூறினர். இதனையடுத்து ஒருங்கிணைந்த பதில் மனுவாக தாக்கல் செய்ய உள்ளதால் ஒருமுறை மட்டும் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஒரு மனுவுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் முப்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். இந்த தொகையை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு செலுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *