மது அருந்தியதில் தகராறு-4 பேருக்கு ஆயுள் தண்டனை
1 min read
Four sentenced to life imprisonment for drinking alcohol
4.6.2026
கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கீழப்பாளையூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி, இடுகாடு அருகே பூவரசன்(19) அருண்பாண்டியன் செல்வகணபதி கிருஷ்ணகுமார் ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்தில் மது அருந்தி கொண்டிருந்தபோது அங்கு வந்த பாலாஜி(27), கவியரசன்(26), ஆனந்த்(32), அருண்குமார்(25) மற்றும் 16 வயது இளம்சிறார் ஆகியோருக்குள் ஏற்பட்ட தகராறில் தாக்கிக் கொண்டதில் ஏற்பட்ட தகராறில் தாக்கிக் கொண்டதில் அருண்பாண்டியன் (21) பலத்த அடிபட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக கருவேப்பலங்குறிச்சி காவல் நிலையத்தில் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விருத்தாச்சலம் காவல் கண்காணிப்பாளர் தீபா சந்திரன் இவ்வழக்கினை விசாரணை மேற்கொண்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்தனர். பின்னர் விசாரணை முடிந்து குற்றவாளிகள் மீது சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது . இந்த வழக்கு நீதிபதி சரஸ்வதி முன்னிலையில் நீதிமன்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு பாலாஜி, கவியரசன், ஆனந்த், அருண்குமார் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 3ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். குற்றவாளிகள் அனைவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ் வழக்கில் அரசு வழக்கறிஞர் வனராசு வாதாடினார்.