June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தலைக்கு ரூ. 15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை

1 min read

Maoist shot dead with Rs. 15 lakh reward on head

6.8.2025
சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டம் கம்டரா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

இதில், மாவோயிஸ்டு முக்கிய தளபதி மார்ட்டின் கர்கிடா சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட மாவோயிஸ்டு தளபதி மார்ட்டின் தலைக்கு ரூ. 15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. என்கவுன்டர் நடந்த பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *