அஞ்சல்துறயின் இந்தியா போஸ்ட் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம்
1 min read
India Post Bank launches mobile banking service
8.8.2025
இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் 2018 ம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர் கள் சேமிப்பு கணக்குகளை துவங்கி உள்ளனர்.
தமிழக அரசின், புதுமைப் பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவி தொகை கணக்குகள், விவசாயிகளுக்கான பிரதம மந்திரி கிசான் கணக்குகள், 100 நாள் வேலை கணக்குகள், கர்ப்பிணிகளுக்கான கணக்குகள். முதியோர் உதவி தொகை கணக்குகள் மற்றும் அனைத்து விதமான அரசு மானியம் உதவி தொகை பெறும் கணக்குகளும் இதில் அடங்கும். ஆரம்ப காலத்தில் துவங்கப்பட்ட பல சேமிப்பு கணக்குகளில் வாரிசு நியமனம் செய்யப்படாமல் உள்ளது.
சேமிப்பு கணக்கிற்கு வாரிசு நியமிப்பதன் மூலம், கணக்குதாரர் இறப்பிற்குப் பிறகு கணக்கில் உள்ள தொகையை மிக எளிய முறையில் மிக விரைவாக வாரிசுதாரர்கள் பெற முடியும். அனைத்து விதமான சேமிப்பு கணக்குகளிலும் வாரிசு நியமனம் செய்யப்பட தேவையான வசதி அனைத்து அஞ்சலகங்களில் உள்ளது.
மேலும் வாடிக்கையாளர்கள் ப்ளே ஸ்டோர்-ல் உள்ள ஐபிபிபி மொபைல் செயலி மூலம் அவரவரே வாரிசு நியமனம் செய்வது மற்றும் மாற்றம் செய்வது ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மேலும் ஐபிபிபி செயலி மற்றும் தபால் காரரின் உதவியுடன் தங்கள் கணக்குகளில் ஆதார் சீடிங் செய்து அரசின் நேரடி மானியங்களையும் எளிமையாக பெறலாம். அதுமட்டுமல்லாமல் IPPB வங்கி கணக்குடன் அஞ்சலக சேமிப்பு கணக்கை இணைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்.
மேலும் ஐபிபிபி செயலி வாயிலாக செல்வமகள், தங்கமகன், அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எளிமையாக வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் பணம் செலுத்தலாம். மேலும் பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து வெறும் ரூ.555, ரூ.755 பீரிமியத்தில் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் வரையிலான தனி நபர் விபத்து காப்பீடு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் உங்கள் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு காப்பீடு எடுக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வியாபார கணக்கு மூலம் வியாபாரிகள் தங்கள் கடைகளில் யுபிஐ ஸ்டிக்கர் அட்டை மூலம் பணம் பெறும் வசதியும் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையுமாறு கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப் பாளர் செ.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.