கடையம் திருவள்ளுவர் கழக மாதாந்திர கூட்டம்
1 min read
Kadayam Thiruvalluvar Kazhagam Monthly Meeting
12.8.2025
கடையம் திருவள்ளுவர் கழகத்தின் மாதாந்திர சிறப்பு கூட்டம் கடந்த 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை ) கடையம் வடக்கு தேர் தெருவி்ல் உள்ள கே.எஸ்.எஸ்.சிற்றரங்கில் நடந்தது. திருவள்ளுவர் கழகத் தலைவர் தமிழ்த்தென்றல் ஆ.சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார். இதில் ஆன்மிகவும் யோகமும் என்ற தலைப்பில் பிரம்மஸ்ரீ பேராசிரியர் ப.மகாலிங்கம் சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக ஸ்ரீஜா, திவ்யா, நேகா ஆகியோர் கடவுள் வாழ்த்துப்பாடினார்கள். க.சங்கரநாராயணன் வரவேற்றார். மு.வேலு குறள்சிந்தனை சொன்னார். அறிவுடை நம்பி நன்றி கூறினார். இன்பசேகரன் நன்றி கூறினார்.
திருவள்ளுவர் கழக செயலாளர் கல்யாணிசிவகாமி நாதன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியதோடு, பல்வேறு குறிப்புகளையும் எடுத்துக்கூறினார்,