ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பு-33 பேர் பலி
1 min read
Jammu and Kashmir cloudburst-12 people killed
12.8.2025
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்துவார் மாவட்டம் சோஸ்டியில் மேகவெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 33 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 120 பேர் படுகாயமடைந்துள்ளனர் . 220க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது என கிஷ்த்வார் துணை கமிஷனர் பங்கஜ் சர்மா தெரிவித்தார்.
இது தொடர்பாக, மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஜம்மு காஷ்மீர் சோஸ்டி பகுதியில் மேக வெடிப்பு பெருவெள்ளத்தின் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. மேகவெடிப்பு பெருவெள்ளம் அதிகளவிலான உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும்.
நிர்வாகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. இந்த வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். ஹெலிகாப்டர் மூலம் மீட்புபணிகளை மேற்கொள்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
மச்சைல் மாதா யாத்திரை செல்லும் வழி இது நிகழ்ந்திருப்பதால் யாத்ரீகர்கள் பலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாம்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நிர்வாகம் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
டெல்லியில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கல்காஜி பகுதியில் மழையால் ராட்சத மரம் ஒன்று வேருடன் பெயர்ந்து விழுந்து உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
கல்காஜி பிளாக் B பகுதியில் மரம் விழுந்ததில் அடியில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒரு பெண் மரத்தின் அடியில் சிக்கிக்கொண்டார்.
சாலையில் நீர் தேங்கியிருந்த நிலையில் மூழ்காமல் இருக்க மரத்தின் ஒரு பகுதியை பிடித்துக்கொண்டு அப்பெண் உயிருக்கு போராடினார். பின்னர் அவரை மீட்பு படையினர் வந்து பத்திரமாக மீட்டனர்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மரம் விழுந்ததில் பல வாகனங்களும் சேதமடைந்தன.
மற்றொரு சம்பவத்தில் அதே கல்காஜி பகுதியில் இன்று காலை மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 50 வயது நபர் மற்றும் அவரின் மகள் படுகாயமடைந்தனர்.