June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆலங்குளத்தில் திருச்சி வேலுச்சாமி சிறப்புரை

1 min read

Trichy Velusamy’s special speech at Alankulam

18.8.2025
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளர் திருச்சி வேலுச்சாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில், ஆலங்குளம் பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பேச்சாளர் திருச்சி வேலுச்சாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.ராமசுப்பு, மாநில பொதுச் செயலாளர் எம்.எஸ்.காமராஜ், ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் கொடிக்குறிச்சி திரு.முத்தையா, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் செங்கோட்டை யூனியன் சேர்மன் சீவநல்லூர் ப.சட்டநாதன், சண்முகசுந்தரம், மாநில பேச்சாளர் ஆலடி சங்கரையா, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர்கள் ரூபன் தேவதாஸ், மகாராஜா, தினகரன், குமார் பாண்டியன், அழகுதுரை, கதிரவன் மற்றும் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர்கள் வில்லியம் தாமஸ், சிங்கக்குட்டி மற்றும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பெருந்தலைவர் கு.காமராஜர் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *