குற்றாலம் மெயின் அருவியில் அபாய எச்சரிக்கை
1 min read
Danger warning at Courtallam Main Falls
18.8.2025
குற்றாலத்தில் அனைத்து அருவிகளி லும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர் விடு முறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. மாலையில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்ததால், மெயின் அருவி ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால், குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி,சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர்வ ரத்து அதிகரித்து காணப்பட்டது.
தண்ணீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக அருவிகளில் குடிக்க சுற்றுலாப் பகுதிகளுக்கு தடைவிதிக்கப் பட்டது. மெயின் அருவியில் கடந்த 2 நாட்களாக சுற் றுலாபயணிகள் குளிக்க தடை நியமிக்கப்பட்ட நிலையில் விடுமுறை தினமான நேற்று வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர். தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்ததால், காலை 11 மணியளவில் குற்றாலம் மெயின் அருவியில் பேரிகார்ட் அமைக்கப்பட்டு அருவியின் ஓரமாக நின்று சுற்றுலா பயணிகள் குளக்க அனுமதிக்கப்பட்டனர் ஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற் றுலா பயணிகள் கூட்டம் அதிக ளவில் குவிந்தனர்.
சிற்றருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள படகு குழாமில் படகு சவாரி மேற்கொண்டனர். தொடர்ந்து சாரல் மழை விட்டு விட்டு பெய்த வண்ணம் இருந்தது.
குற்றாலத்தில் அதிக வாகனங்கள் வருகையால், குற்றாலத்தில் ஐந்தருவி செல் லும் ரோடு, பழைய குற்றாலம் ரோடு என பல பகுதிகளில் போக் குவரத்து நெருக்கடியும்
ஏற்பட்டது.
குற்றாலம் மெயின் அருவியில், மாலை 4 மணிக்கு மேல் தண் ணீர் மேலும் அதிகரிக்க துவங்கியது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால், தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தது இதனால் குற்றாலம் மெயின் அருவி பகுதியில், வெள்ள அபாய எச்சரிக்கை சைரன் ஒலிக் கப்பட்டது. இதனை தொடர்ந்து, அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள், அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.