June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

கீழப்பாவூர் குளத்தில் 3.50கோடி செலவில் படகுகுழாம்-அமைச்சர் பணிகளை துவக்கி வைத்தார்.

1 min read

The Minister inaugurated the construction of a boat launch at a cost of Rs 3.50 crore at Keelappavur pond

22.8.2025
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியகுளத்தில் ரூ..3.50 கோடி மதிப்பீட்டில் படகுகுழாம் அமைக்கும் பணியினை தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

கீழப்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியகுளத்தில் ரூ..3.50 கோடி மதிப்பீட்டில் படகுகுழாம் அமைக்கும் பணியினை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
கீழப்பாவூர் பெரியகுளத்தில் சுற்றுலாத்துறை சார்பில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் படகுகுழாம் மற்றும் ஏரி மேம்பாடு செய்யப்படவுள்ளது. இதற்கான பணி தொடக்க விழா தென்காசி மாவட்டம் கோதை நாச்சியார்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ‌.கே. கமல்கிஷோர் தலைமை தாங்கினார். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் . ஈ.ராஜா, கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மு.கனக பொன்சேகா முருகன், சி.அன்பழகு சின்னராஜா, ரா.விஜிராஜன்,மா.இசக்கிமுத்து, ஜெ.முத்துசெல்வி ஜெகதீசன் மற்றும் பேரூராட்சி அனைத்து நிலை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *