தென்காசியில் தடகள போட்டி- கலெக்டர் துவக்கி வைத்தார்
1 min read
Athletics competition in Tenkasi – inaugurated by the Collector
27.8.2025
தென்காசி மாவட்டத்தில் தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாட்டாகுறிச்சி மாவட்ட விளையாட்டு மையத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான 1500 மீட்டர் தடகளப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், துவக்கி வைத்தார்.
தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாட்டாகுறிச்சி மாவட்ட விளையாட்டு மையத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான 1500 மீட்டர் தடகளப் போட்டியினை (26.08.2025) தென்காசி சட்டமன்ற உறுப்பினர் த
ஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்ததாவது.
தமிழ்நாடு முதலமைசரின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” விளையாட்டு போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 2025-2026 ஆம் ஆண்டில் நடத்தப்படவிருக்கும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 37 விளையாட்டுக்கள் 53 வகைகளில் தென்காசி மாவட்ட, திருநெல்வேலி மண்டல அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் 12.09.2025 வரை நடைபெறவுள்ளது.
மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000/- மும் இரண்டாம் பரிசாக ரூ.2000/- மும், மூன்றாம் பரிசாக ரூ.1000/-மும். சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலர் ராஜேஷ், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் கௌசல்யா , தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சேக் அப்துல்லா. ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் எம்.கனகராஜ் முத்துப்பாண்டியன். பாட்டாக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் ப.அன்னலெட்சுமி பாட்டாக்குறிச்சி பஞ்சாயத்து துணைத்தலைவர் ந.முருகேசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் ள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள். டற்கல்வி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.